சத்ரபதி சிவாஜி ஒரு உலகளாவிய ஆதர்சம்

டாக்டர் கேதார் பால்கே எழுதிய “சிவ்சத்ரபதிஞ்சே வர்ஷா: ஸ்வராஜ்ய தே சாம்ராஜ்யம்” மற்றும் “லெஜசி ஆப் சத்ரபதி சிவாஜி: பிரம் கிங்டம் டு எம்பயர்” ஆகிய இரண்டு புத்தகங்களை மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள அண்ணா பாவ் சாத்தே ஆடிட்டோரியத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் வெளியிட்டு பேசினார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், போரின் அடிப்படையில், சமூக நடைமுறைகள் அடிப்படையில், ஆட்சியின் அடிப்படையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பாரத மக்களுக்கும் உலகளாவிய லட்சியமாக திகழ்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை ஒரு போர்வீரன் மற்றும் தலைவர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் பின்பற்றத்தக்கது. அவர் நம் தேசத்தின் வெற்றிகரமான உள்ளுணர்வை அடையாளப்படுத்துகிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் தன்மையைப் புரிந்து கொள்ள பாரதத்தில் பல்வேறு மன்னர்களுக்கு 200 அல்லது 300 ஆண்டுகள் ஆனது. அரபு பாலைவனத்திலிருந்து பரவிய இஸ்லாம் அதன் இயல்பில் அதிக அரசியலைக் கொண்டிருந்தது. அதேபோல், ரோமில் இருந்து வெளியேறிய கிறிஸ்தவம் அதன் இயல்பில் குறைவான ஆன்மீகம் கொண்டிருந்தது. அது ஒரு மத ஆக்கிரமிப்போ அல்லது அரசியல் ஆக்கிரமிப்போ அல்ல. மாறாக அது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். அந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் முறியடிக்கப்படவில்லை என்பதல்ல, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சிகள் நடந்தன. இருப்பினும், அவற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீடித்த சோதனை சத்ரபதி சிவாஜி மகாராஜின் சோதனையாகும். அவர் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை நிறுவ நினைக்கவில்லை. சத்ரபதி சிவாஜி, மக்களிடையே அமைப்பு  ரீதியான உணர்வைத் தூண்டினார். சமுதாயத்தில் அமைப்பு ரீதியான சக்தி எப்போதும் வெற்றி பெறும். மக்களிடையே லட்சியத்தின் மீது பக்தியைத் தூண்டினார். அத்தகைய பக்தி இருக்கும் போது நாம் நமது தீமைகளைக் குறைக்கிறோம். அன்று நடந்த போர் இன்றும் தொடர்கிறது. அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே இப்போதும் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் மையம் பாரதமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அதற்கு இணையான பலம் வேறு எந்த தேசத்திற்கும் இல்லை. இதனால்தான் சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியம் உலகளாவியது. ஆக்கிரமிப்பாளர்களான மொகலாயர்கள் தோற்கடிக்க முடியாதவர்கள், அவர்களை யாராலும் தடுக்க முடியாது என்ற சிந்தனைக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் என்று புத்தகத்தின் ஆசிரியர் கேதார் பால்கே கூறினார். மராட்டியர்களிடம் தேசத்தின் உணர்வை பற்றவைத்தார். ஒரு யுத்தத்தில் தோற்றால் மொத்த போரிலும் தோற்றுவிடுவோம் என்ற தவறான எண்ணத்தை மராட்டியர்கள் முடிவுக்கு கொண்டு வர இது உதவியது.  ஸ்ரீ சைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி மெமோரியல் கமிட்டியின் பின்னணியில் மறைந்த மோரோபந்த் பிங்கலேஜியின் யோசனை இருந்தது என்று உதய் கார்டேகர் கூறினார். அவர் கண்ட கனவை நிறைவேற்ற நாம் முயற்சிப்போம்” என தெரிவித்தார்.