பெரிய துறைமுகங்களாக மாற்ற வேண்டும்

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து துறையின் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமையில் நடைபெற்ற, துறைமுகங்கள், கப்பல் கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 நாள் கருத்தரங்கம் முக்கிய முடிவுகளுடன் நிறைவு பெற்றது. மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் மற்றும் சாந்தனு தாக்கூர் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், அனைத்து பெரிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய சர்பானந்த சோனோவால், “பாரதத்தின் நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்த, வளர்ச்சியடைய செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிப்பூண்டுள்ளது. 2047ம் ஆண்டுக்குள், அனைத்து துறைமுகங்களையும் பெரிய முகங்களாக மாறுவதற்காக சிறந்த திட்டங்களை தயாரித்து செயல்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார். இந்த கருத்தரங்கில், சரக்குப் பெட்டகங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்த சிறப்பு வசதி, கப்பல் போக்குவரத்து மேலாண்மை, மாலுமிகளுக்கான 5ஜி தொழில்நுட்ப சேவை, மேற்பார்வை கட்டுப்பாடு, பசுமைக் கிடங்கு அமைப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.