கங்கனாவின் வைரல் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது அறிக்கைகளுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவர். தற்போது, ​​மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரபூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து, அவரது பழைய வீடியோக்கள் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில், கங்கனா, “உத்தவ் தாக்கரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திரைப்பட மாஃபியாக்களுடன் கூட்டு சேர்ந்து என் வீட்டை இடித்து என்னை பெரிதாக பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்களா? இன்று என் வீடு இடிக்கப்படுகிறது, நாளை உங்களது பெருமை அழியும். அது அதற்குரிய நேரத்தில் நடக்கும். ஒரு பெண்ணை யார் இழிவுபடுத்தினாலும் அவரது வீழ்ச்சி நிச்சயம் என்பதற்கு சரித்திரம் சாட்சி. ராவணன் சீதையை அவமதித்தான், கௌரவர்கள் திரௌபதியை அவமதித்தார்கள். நான் அந்த பெண் தெய்வங்களுக்கு நிகரில்லை என்றாலும் நானும் ஒரு பெண்தான். நான் என் நேர்மையை பாதுகாத்தேன். நான் யாரையும் காயப்படுத்தவில்லை. பெண்ணை அவமரியாதை செய்யும் போதெல்லாம் உங்களது அழிவு உறுதி என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என பேசியிருந்தார்.