சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக மீண்டும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா, தனது சமூக ஊடகப் பதிவில், “திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? அதைவிட முக்கியமாக கௌரவர்கள் யார்?” என்று பதிவிட்டுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்து தொடர்பாக தெலங்கானா பா.ஜ.க தலைவர் கூடூர் நாராயண ரெட்டி என்பவர், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிட் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.