தமிழக இளைஞர்கள் ஆர்வம்

இந்திய விமானப் படையின் தமிழ்நாடு மண்டல தேர்வு குழு அதிகாரி வினம்ரதா ஷர்மா, “அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப் படையில் 3,000 அக்னிவீரர்கள் வாயு வீரர்கள் நாடு முழுதும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விமானப் படையில் நிர்வாகம், மருத்துவ பிரிவு, வாகன தொழில்நுட்பம், பிட்டர் உட்பட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பதவிகள் நிறைய உள்ளன. அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு பல மாதங்களுக்கு முன், விமானப் படையில் சேர்வது தொடர்பாக விமானப்படையின்  தமிழக மண்டலம் சார்பில் இளைஞர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 35 ஆயிரம் பேர் விமானப் படையில் இணைந்து சேவையாற்ற விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்கும். https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு, ஜூலை 24 முதல் நடைபெற உள்ளது. விமானப் படையில் சேரும் வீரர்களுக்கு தொழில்நுட்பத் துறையில் அதிக திறன் வளர்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், தங்களது பட்டப் படிப்புகளையும் அவர்கள் மேற்கொள்ள முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளியேற விரும்பும் வீரர்களுக்கு விமானம் தொடர்பான பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.