இமயமலையில் யோகா

சர்வதேச யோகா தினத்தன்று லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பாரத சீன எல்லைப் பகுதிகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் யோகா பயிற்சி செய்தனர். இதனை முன்னிட்டு அவர்கள் ஒரு பாடலையும் பாடி அர்ப்பணித்தனர். பாரதத்தின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை முக்கிய கருப்பொருளாக வைத்து அவர்கள், லடாக்கில் 17,000 அடி உயரத்திலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 16,500 அடி உயரத்திலும், உத்தரகண்டில் 14,500 அடி உயரத்திலும், சிக்கிமில் 17,000 அடி உயரத்திலும் பனிச்சூழலில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையின் ஹிம்வீரர்கள் யோகா செய்தனர். மேலும், அசாமின் கௌஹாத்தி லச்சித் காட்டில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் முன்பாகவும் அவர்கள் யோகாசனம் செய்தனர்.