தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் அக்னிவீரர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 சதவீத காலிப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு, இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இஞ்சினியர்ஸ் உளீலிட்ட 16 பொதுத்துறை நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த இட ஒதுக்கீடு, ஏற்கனவே உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக வழங்கப்படும்.அக்னிவீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக, தேவையான வயது தளர்வுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.