அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்

மத்திய அரசின் ஆவணங்கள், தகவல்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின், இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் தேதிய புள்ளியியல் மையம் ஆகியவை இணைந்து, மத்திய அரசு ஊழியர்கள், தகவல்களைச் சேமிக்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் முக்கியமான, மிகுந்த ரகசியமாக வைக்கக்கூடிய ஆவணங்கள், தகவல்களை கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸில் சேமிக்கக் கூடாது. தங்களின் சுய விவரங்கள், தகவல்களை மட்டும் சேமிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கணினியின் இன்டர்னல் மெமரியில் சேமிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலம் அரசு ஆவணங்கள் எதையும் ஸ்கேன் செய்யக்கூடாது. அரசு ஊழியர்கள் தங்கள் கணிகளை ரூட் அல்லது ஜெயில்பிரேக் செய்யக்கூடாது. நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இந்த சைபர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வி.பி.என் சேவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது, பயங்கரவாதிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதைக் கண்டுபிடிப்பதும் பின்தொடர்வதும் கடினம் என்பதால் இந்தத் தடைவிதித்துள்ளது. மேலும், வி.பி.என் நிறுவனங்கள் தங்களின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் நாட்டில் இருந்து வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.