நுபுர் சர்மா பேசியதை சாக்கிட்டு சில நாட்களுக்கு முன் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் நடத்திய வன்முறைகளில் சிறுவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக, கான்பூர் வன்முறையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மதரசாக்களில் படிக்கும் சிறுவர்களை காவல்துறை கண்காணித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவன் சமீபத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்தபோது பல உண்மைகளை தெரிவித்துள்ளான். அதில், வன்முறைக்கு முன்பாக, முஸ்லிம்கள் அந்த சிறுவர்களுக்கு பலமுறை பணம், பிரியாணி கொடுத்ததாகவும் மதவெறியை ஊட்டியதாகவும் கூறியுள்ளான். இந்த சிறுவர்களை கல் எறியவும் பெட்ரோல் குண்டுகளை எறியவும் மதவெறியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்று சிறுவர்களையும் பெண்களையும் வன்முறைக்கு பயன்படுத்திக்கொண்டு அவர்களின் பின்னால் பயங்கரவாதிகள் ஒளிந்துகொள்ளும் சம்பவங்கள் காஷ்மீரில் பல காலமாக நடைபெற்று வருகிறது. அது தற்போது அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்குமாறும் இது தொடர்புடைய பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.