அரசுக்கு ஆளுநர் கேள்வி

பாரதத்தில் பல இடங்களை போலவே, ஜார்கண்ட் மாநிலத்திலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் வன்முறைகளை அரங்கேற்றினர். ஜார்கண்ட் அரசு இதனை சரியாக கையாளவில்லை. முன்கூட்டியே கலவரங்களை தடுக்கத் தவறியது. இதனால் நிலைமை கைமீறிபோகவே கடைசி முயற்சியாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ராஞ்சியில் இந்த வன்முறையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 42 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது, மொத்தம் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து நிலைமையை ஆய்வு செய்த ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பய்ஸ், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வன்முறை ஊர்வலத்தின் போது எத்தனை காவலர்கள் பணியில் இருந்தனர், ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை? நீர் பீரங்கி, ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏன் பயன்படுத்தவில்லை? இதுகுறித்த உளவுத் தகவல்கள் என்ன? சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பும் நபர்கள் குறித்து கண்டறியப்பட்டதா? என பல கேள்விகளை கேட்டுள்ள ஆளுநர், இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் உதவும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்தவும், அவர்களின் புகைப்படங்களை நகரின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.