நெல்லையப்பருக்கு சந்தனாதி தைலம்

புராணத்தின்படி சுயம்புவாகத் தோன்றிய நெல்லையப்பர் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சந்தனாதி தைலம் பூசுவது வழக்கம். கடந்த நூறு வருடங்களாக தைலம் தயாரிக்கும் பணி நடைபெறாத நிலையில், மூலிகைகள் மூலம் மீண்டும் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. சுவாமி நெல்லையப்பருக்கு சாத்தப்படும் சந்தனாதி தைலம் பல ஆண்டுகளாகச் சாத்தப்படாமல் பூஜைகள் நடந்து வருவது பற்றி பக்தர்கள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, சுவாமி சந்நிதியின் வெளிப்பிராகாரத்தில் சந்தனாதி தைலம் தயாரிப்பதற்கென பிரத்யேகமாக அறை உருவாக்கப்பட்டு, 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்புப் பாத்திரத்தில் 44 வகையான மூலிகைகள் மூலம் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி முடிய சுமார் எட்டு மாதங்கள் எடுக்கும். கோயிலில் சந்தனாதி தைலம் மீண்டும் தயாரிக்கப்படுவது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.