பா.ஜ.கவில் ரஜினி ரசிகர்கள்

அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பா.ஜகவில் இணைகின்றனர். “முன்பு எங்க அண்ணாமலையை நம்பி எதிர்பார்த்து காத்திருந்தோம், இப்போது இந்த அண்ணாமலையை நம்பி களமிறங்கியிருக்கிறோம். `ரஜினியிடம் என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பா.ஜ.கவில் இருக்கும்!’ என அண்ணாமலை எங்களிடம் கூறியது உற்சாகத்தை அளித்திருக்கிறது” என ரஜினி ரசிகர்கள் பேசிவருகின்றனர்.