பிவேட் மீடியா ஹவுஸிடம் பேசிய ஜமாத் உலமா இ ஹிந்த் தலைவர் சாஹைப் காஸ்மி, “நுபுர் ஷர்மாவை மன்னிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. நூபுர் ஷர்மாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடங்கிய எதிர்ப்பு மற்றும் அவர் குறித்து தெரிவிக்கப்பட்ட இழிவான கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்த பா.ஜ.க முடிவை ஜமாத் உலமா இ ஹிந்த் வரவேற்கிறது. சட்டத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டின் சட்டத்தை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. வன்முறைக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் ஒரு `ஃபத்வா` (தடை) வெளியிட முடிவு செய்துள்ளோம். முஸ்லீம் அமைப்புகளை வன்முறையைத் தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம். அசாதுதீன் ஒவைசி மற்றும் முகமது மதானிக்கு எதிராகவும் ஃபத்வா வரும்” என தெரிவித்தார். மேலும், வன்முறையை தூண்டும் இதுபோன்ற பல முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அவற்றிற்கு கிடைக்கும் நிதியுதவி, நிதி ஆதாரங்கள் குறித்து விசாரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பு.