கருப்பு உடைக்கு தடை

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தால் கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். எதிர் கட்சிகளான பா.ஜ,க கங்கிரஸ் மட்டுமில்லாமல் கேரள பொதுமக்களும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொச்சி வந்த பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட  பா.ஜ.க உள்ளிட்ட எதிர் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் முயன்றனர். மேலும், பினராயி விஜயன் கலந்துகொள்ளும் விழாவில் கருப்பு முகக்கவசம், கருப்பு சட்டை உட்பட கருப்பு நிற உடை அணிந்த பத்திரிகையாளர்கள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கலூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கறுப்பு ஆடை அணிந்து வந்த இரண்டு திருநங்கைகளை கேரள காவல்துறையினர் கைது செய்து அவர்களை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் இழுத்துச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரள மக்களிடம் கடும் வெறுப்பை விதைத்துள்ளது.