அனைத்திலும் பா.ஜ.க வெற்றி

அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு பெரிய தேர்தல் வெற்றியை பெற்றுள்ளது. அங்கு கடந்த ஜூன் 8ம் தேதி கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் (கே.ஏ.ஏ.சி) தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பா.ஜ.க 26 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும், ஆம் ஆத்மி 10 இடங்களிலும், சி.பி.ஐ (எம்.எல்) 15 இடங்களிலும் போட்டியிட்டன. அந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியானது.  அதில் தேர்தல் நடைபெற்ற 26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 26 இடங்களில் 24 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்ற சூழலில் தற்போது அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2017 மற்றும் தற்போது நடந்த தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கே.ஏ.ஏ.சி 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மீதமுள்ள 4 பேர் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.