ஒளியை வெப்ப ஆற்றலாக மாற்றுவதன் மூலம் ஒளி தூண்டுதல் மூலம் செயல்படும் ஒரு ஸ்மார்ட் பொருளை பாரத விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த திரவ படிக பாலிமர் நெட்வொர்க் பொருள், மென்மையான ரோபாட்டிக்ஸ் மற்றும் மைக்ரோ எலக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (எம்.இ.எம்.எஸ்) சாதனங்களில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு கூட்டு ஆய்வில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி நிறுவனமான பெங்களூரு நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மையம் (சி.இ.என்.எஸ்) மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மோனோ பங்க்ஷனல், பை பங்க்ஷனல் லிக்விட் கிரிஸ்டல் மீசோஜன் இரசாயன கலவையை குறுக்கு இணைப்பதன் மூலம், இடஞ்சார்ந்த ஸ்ப்ளே டிஃபார்ம் செய்யப்பட்ட இந்த திரவ படிக பாலிமர் நெட்வொர்க்குகள் (எல்.சி.என்) பிலிம்களை உருவாக்கியுள்ளனர்.