குஜராத்தின் சூரத்தில் உள்ள சந்த் டோங்ரேஜி மகாராஜ் நகராட்சிப் பள்ளியில் முதல்வராக பணியாற்றும் நரேஷ் மேத்தா, கோடை விடுமுறையில், 1,117 மாணவர்களுக்கு ஆன்லைனில் பகவத் கீதையை இலவசமாக கற்பித்து வருகிறார். மாணவர்களின் எளிமையான புரிதலுக்காக, சமஸ்கிருத ஸ்லோகங்களை உள்ளூர் குஜராத்திக்கு மொழிபெயர்த்து, மாணவர்களை விரைவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக கற்பிக்கிறார். அவரது கற்பித்தல் முறை மாணவர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டதால், சூரத்திற்கு வெளியேயும் பல மாணவர்களும் பகவத் கீதை வகுப்பில் சேரத் தொடங்கியுள்ளனர். பகவத் கீதையை தங்கள் வீடுகளில் பலர் வைத்திருந்தாலும், அதை உண்மையில் படிக்கும் முயற்சியை வெகு சிலரே மேற்கொள்கின்றனர், அதனை மாணவர்கள் எடுத்து படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய முயற்சி இது என மேத்தா கூறுகிறார். இதைத்தவிர, கொரோனா, மோசமான பொருளாதார நிலை காரணமாக படிப்பை நிறுத்திய அல்லது பெற்றோரை இழந்த பெண்களுக்கு மேத்தா பயிற்சி மற்றும் பிற உதவிகளை வழங்கி வருகிறார். பள்ளியிலிருந்து பாதியில் வெளியேறிய 193 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை, வெளி மாணவர்களாக 10 வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வெழுத ஊக்குவித்து வருகிறார். இப்படி இவர் இதுவரை 512 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். அவர்கள் இப்போது உயர் படிப்பைத் தொடர்கின்றனர். சிலர் வேலை செய்யவும் தொடங்கிவிட்டனர்.