ஆஸ்திரேலியாவின் என்.எஸ்.டபள்யு பல்கலைக் கழகத்தில் பயிலும் மணவர்கள் அங்குள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திரையிட முடிவு செய்தனர். இதற்கு அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் படத்தை திரையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களை மிரட்டியுள்ளனர். விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ 1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் ஹிந்துக்கள் மீதான இனப் படுகொலைகளின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது.