பின்வாங்கிய அமைச்சர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகு தற்போது, ‘ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்க தயார். நாளைக்கே ஆவின் ஹெல்த் மிக்ஸ் தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம். ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வழங்க முடியுமா என ஆவின் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். முயற்சி செய்வதாக கூறியுள்ளனர். டெண்டர் இன்னும் முடிவாகவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதற்கிடையே, பால்வளத் துறை அமைச்சர் நாசர், கடந்த சட்டசபை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தால் ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வெளியிடப்படும் என கூறப்பட்டது. இனிமேல் தான் ஆவின் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க போகிறோம். அதற்கு சுகாதார சான்று பெற வேண்டும், பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே, ஹெல்த் மிக்ஸ் வெளியிட முடியும் என கூறியுள்ளார்.