முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் (ஐ.ஓ.சி) பாரத தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரிந்தம் பக்ஷி, “இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் பாரதம் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். இது குறுகிய மனப்பான்மை கொண்ட தேவையற்ற விமர்சனங்கள். மத்திய அரசு எல்லா மதங்களையும் மாண்புடன் அணுகுகிறது. முகமது நபி பற்றிய சில அவதூறான டுவீட்களும், கருத்துகளும் தனி நபர்களால் முன்வைக்கப்பட்டவை. அது கருத்தல்ல. அவ்வாறு பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அவர்கள் சார்ந்த கட்சி எடுத்துள்ளது. அப்படியிருந்தும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைமைச் செயலகம், உள்நோக்கத்துடன் கூடிய தவறான, விமர்சனங்களை முன்வைக்கிறது. இது சிலரின் தூண்டுதலின் பேரில் எடுக்கப்படும் பிரிவினை முயற்சியே இது என்றே தோன்றுகிறது. எனவே இதுபோன்ற சர்ச்சைகளை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மதவாத பார்வையுடன் பிரச்சினையை அணுகாமால் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளுக்கும் அதற்கான மரியாதையை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.