தாலிபான்மயமாகும் கேரளா

கம்யூனிஸ்டுகளின் உதவியால், கேரள அரசு அதிகாரிகளின் தாலிபான்மயமாக்கல் இப்போது மிக வேகமாக ஒரு பயமுறுத்தும் வேகத்தில் நடந்து வருகிறது. அதற்கு சில உதாரணங்கள்:

சம்பவம் 1: சமீபத்தில் ஹலால் உணவகங்களில் இருந்து ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்ட இளம் குழந்தைகள் இறந்தனர். அப்போதுதான் மூவாட்புழா சுகாதார ஆய்வாளர் அஷ்ரப்பின் புகைப்படம் வைரலானது. அவர் முழு சீருடையில் இருந்தார், ஆனால் வழக்கத்திற்கு மாறாக நீண்ட அழுக்கான தாடியுடன் இருந்தார். நாகரீக உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறைகளை யாரும் அனுமதிப்பதில்லை, குறிப்பாக உணவைக் கையாளும் போது. இத்தகைய மதவெறி அதிகாரிகள் ஹலால் மாஃபியாக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. தனது தோற்றம் கேரளாவின் சீருடை விதிப்படி இருப்பதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். பி.எப்.ஐ அமைப்பின் ஊதுகுழலான தி தேஜஸ் நியூஸ் இந்த சம்பவத்தை திரித்து இஸ்லாமோஃபோபியா என கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் கேரள காவல்துறை வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டுவதாகவும் அது குற்றம் சாட்டியது. முன்னதாக, காபூலை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதை ‘அற்புதம்’ என்று இந்த பத்திரிகை குறிப்பிட்டு பாராட்டியது நினைவு கூரத்தக்கது.

சம்பவம் 2: கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர், ஆலப்புழாவை சேர்ந்த பி.எச். அஷ்ரப் என்பவர், பேருந்தை இயக்கியபோது தனது சீருடையை அணியாமல் முழு இஸ்லாமிய வெள்ளை அங்கி

மற்றும் தொப்பி அணிந்திருந்தார். இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியபோது, அவர் அரசின் நீல நிற சீருடையைதான் அணிந்திருந்தார், அவர் தன்னை சுத்தம் செய்வதற்காக தனது மடியில் ஒரு வெள்ளை துண்டு வைத்திருந்தார், அவர் தன்னை சுத்தம் செய்வதற்காக தனது மடியில் ஒரு வெள்ளை துண்டு வைத்திருந்தார், தலையில் அணியும் தொப்பி குறித்து எந்த விதிகளும் கூறப்படவில்லை என்று கூறி கேரள மக்களை நம்ப வைக்க சில பிரதான ஊடகங்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்தன.

சம்பவம் 3: கேரளாவில் உள்ள கிராம அதிகாரி ஒருவர் முஸ்லிம்கள் அணியும் முழு வெள்ளை கவுன் மற்றும் விரிவான தொப்பி அணிந்து கோப்புகளின் குவியலுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அது கேரளாவில் எந்த இடம் என்பது சரியாக இன்னும் தெரியவில்லை என்றாலும் அது கண்ணூர் பகுதில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஹலால் உணவைப் போலவே இதுபோன்ற நடவடிக்கைகளும் கேரளாவில் புதிய போக்குகளாக உள்ளன. முஸ்லிம்களை திருப்திபடுத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் தலைவர்கள் மௌனமாக இத்தகைய தீவிரவாத செயல்பாடுகளை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றனர்.

இவற்றை கண்டுகொள்ளாத உள்ளூர் ஊடகங்கள், புகார் கூறும் ஹிந்துக்களை ‘சங்கிகள்’ என்று முத்திரை குத்தி, இதுபோன்ற குற்றங்களை மறைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளன. குற்றம் சாட்டுவதற்கு வேறு ஒன்றும் இல்லாதபோது, ​​எந்த ஒரு ஹிந்துவையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்று குற்றம் சாட்டி அவர்களை வேட்டையாடும் இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரவாதிகளின் பழைய தந்திரம்தான். முன்னதாக கேரள காவல் துறைக்குள் ஊடுருவிய பச்சை விளக்கு என்ற குழுதான் இப்போது கேரள காவல்துறையைக் கட்டுப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், கேரளா விரைவில் மற்றொரு காஷ்மீராக மாறும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

(செய்தி ஆதாரம்: <https://hindupost.in/featured/talibanization-of-kerala-government-service-at-the-hands-of-green-communists/>)