ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் முதல் தகவல் பதிவு செய்ய மூன்று நாள் தாமதம் ஏற்பட்டது குறித்து ஹைதராபாத் காவல்துறையிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) விளக்கம் கேட்டுள்ளது. மேலும், சிறார்களை நுழைய அனுமதித்ததற்காக அந்த பப் மீது வழக்கு பதிவு செய்யவும், விசாரணையின் போது பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தெரியாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஆணையம் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த கடிதம் கிடைத்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் மைனர் பாதிக்கப்பட்டவர்களின் வயதுச் சான்று, எப்.ஐ.ஆரின் தெளிவான நகல், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலங்களின் நகல், குற்றப்பத்திரிகை நகல், தற்போதைய நிலை, விசாரணை நிலை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விரிவான வழக்கு அறிக்கையை அளிக்குமாறும் காவல்துறையை அது கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அசாசுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் மகனும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.