சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தைப் பார்த்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்க தலைவர் மோகன் பாகவத், “இந்தப் படம் வரலாற்றை பாரதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்தப் படம் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் தரும் செய்தி தற்போது நாட்டுக்கு தேவையாக உள்ளது. இதுவரை நாம் பிறர் எழுதிய வரலாற்றையே படித்துக் கொண்டிருந்தோம். இப்போது, பாரதக் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்க்கிறோம். ஒரு பார்வையாளனாக, படம் பிரமாதம் என்று சொல்லலாம். சொல்ல நினைத்த செய்தியை படம் சமரசம் செய்யாமல் சிறப்பாகக் கொடுத்திருக்கிறது. பாரதத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க, இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள வலிமைமிக்க ஹீரோக்கள் போல் பாரத தேசத்தவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று கூறினார். சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் உள்ள சாணக்யபுரி பி.வி.ஆரில் ஆர்.எஸ்.எஸ் சங்க நிர்வாகிகளுக்காக திரையிடப்பட்ட்து. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, கிருஷ்ண கோபாலா, மன்மோகன் வைத்யா, பையாஜி ஜோஷி, சுனில் அம்பேகர், மற்றும் நரேந்திர தாக்கூர் ஆகியோர் படத்தை பார்த்தடனர். நடிகர் அக்ஷய் குமாரும் இதில் கலந்துகொண்டார்.