பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில், அடுத்த மாதம் 3வது வாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 3 நாட்கள் நடைபெறும் இந்த இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என சுமார் 500 பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.