பிரபல வீடியோக்களுக்கான தளமான யூடியூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யவும் பார்வையிடவும் முடியும். அதே நேரத்தில் ஸ்பேம் வீடியோக்கள், தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம், சில விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தானியங்கி அல்காரிதம், சமூக வழிகாட்டுதல்கள், மதிப்பீட்டாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்த விதிமுறைகளின் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், பாரதத்தில் இருந்து மட்டும் 11,75,859 வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. இதுதான் உலகிலேயே மிக அதிகபட்ச நீக்கம். அடுத்ததாக அமெரிக்காவிலிருந்து 3,58,134 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் 44 லட்சம் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திலும் 99.3 சதவிகிதம் தானியங்கி முறையில் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.