கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே தாலுகாவின் அமரகிரி மலேக்கல் திருப்பதி மலையில் அமைந்துள்ளது சிக்க திருப்பதி (ஆந்திராவின் மினி திருப்பதி). இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் கண்காட்சி மையத்தில் ஒருசில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நான்கு மர்ம நபர்கள் நுழைந்தனர். பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி, சிகரெட் புகைத்து, அந்த இடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை மிரட்டினர். மேலும் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தெய்வங்களின் சிலைகள் தடிகளை பயன்படுத்தி உடைத்துள்ளனர். சிலை சேதம் குறித்த தகவல் பரவியதும், கோயில் வளாகத்தில் ஹிந்து ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர். அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் அச்சமும், பதட்டமும் நிலவுகிறது.