மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நுபுர் ஷர்மா. பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரான இவர், சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசுகையில் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தனது கருத்து அந்த தொலைக்காட்சியால் திரித்து, எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என அவர் கூறினார். எனினும், இதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து கற்பழிப்பு, கொலை மிரட்டல்களை விடுத்தனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக் இ லப்பை அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள், நுபுர் ஷர்மாவை கொலை செய்யும் முஸ்லிம்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த லோக்கல் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (இன்குலாப்) கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான குவாவி அப்பாஸி, வெளியிட்ட காணொளி காட்சியில், ‘முகமது நபியை இழிவாகப் பேசிய வாசீம் ரஸ்வி தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தேன். அதேபோல, தற்போது நுபுர் ஷர்மாவின் தலைக்கும் 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கிறேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார்.