ஞானவாபியில் ஸ்வஸ்திக் சின்னங்கள்

சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடம் குறித்து ஆய்வு செய்ய, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சர்வே கமிஷன், கடந்த மே 19 அன்று நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வில் சர்ச்சைக்குறிய ஞானவாபி கட்டமைப்பின் சுவர்களில் பல இடங்களில் ஸ்வஸ்திக் சின்னங்கள், திரிசூலம், சிவலிங்கம் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கட்டமைப்பின் உள்ளே ஒரு தூணில், பண்டைய ஹிந்தி எழுத்தில் ஏழு கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன, இரண்டடி நீளமுள்ள தெய்வத்தின் சிலையும் உள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆய்வின்போது கட்டிடத்தின் மேற்குச் சுவரின் மூலையில் சிருங்கார் கௌரி, உட்பட பல கடவுள்களின் கலைப் படைப்புகள், தாமரை சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு பழமையான கோயில்களின் எச்சங்கள் இருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது. முக்கியமாக அந்த வளாகத்தில் ஆய்வுக்குழு, ஒரு சிவலிங்கத்தை கண்டறிந்தது. இது முஸ்லிம்களால் நீரூற்று போல் மாற்றப்பட்டுள்ளதுடன் அதன் மீது டிரில்லிங் இயந்திரத்தால் ஒரு ஓட்டையும் போடப்பட்டுள்ளது. ஹிந்துக்களை இழிவு செய்யும் விதத்தில், அந்த இடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் கை மற்றும் கால்களை கழுவ பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது நினைவு கூரத்தக்கது.