நீதிபதிகளுக்கு எதிராகப் பேசியதற்காக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) கேரளத் தலைவரான யாஹ்யா தங்கல் என்பவரை குன்னம்குளத்தில் உள்ள அவரது வீட்டில் ஆலப்புழா காவல்துறையினர் கைது செய்தனர். அவரை விடுவிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூறு பேர் அங்கு வந்தனர். ஆனால் கமாண்டோ பிரிவு காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதில் சம்பந்தப்பட்ட சாதிக், ஷமீர், சுதீர், ஷபீக், அன்வர், காசிம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பிறகு ஆலுவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.