ஓசூரில் நடந்த வள்ளலாரின் முப்பெரும் விழாவுக்கு தலைமை வகித்து பேசிய மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘தாய்மொழிப் பற்றை பின்பற்ற வேண்டும், வெள்ளைக்காரன் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கிலம் நம்மைவிட்டு செல்லவில்லை. அமிழ்தினும் இனிது தமிழ். ‘தெய்வ மொழி’ என்ற அடைமொழி தமிழைத் தவிர வேறு எதற்கும் இல்லை. தமிழுக்கு மட்டும்தான் சங்கம் அமைத்தனர். மதுரை ஆதீனத்துக்கு வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகம் ஆன்மிக பூமி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆன்மிகம் நிலையாக இருக்கும். பாரதத்தாய், பசுத்தாய், பெற்றதாய், பூமித்தாய் இவற்றைக் காப்பாற்ற தவறினால் நாடு முன்னேறாது. ஜாதி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்’ என பேசினார்.