யோகியிடம் உதவி கோரும் எம்.எல்.ஏ

சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாசில் இஸ்லாம் அன்சாரி, சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை சந்தித்து பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர், தனது பிராந்தியத்தின் வளர்ச்சி தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து முதல்வருடன் விவாதித்ததாகவும் பில்வா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு பரந்த நிலம் இருப்பதால் அங்கு அரசு விவசாயப் பல்கலைக் கழகத்தையும் மருத்துவ கல்லூரியையும் துவங்கலாம் என்று கூறியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் உறுதியளித்ததாகவும் கூறினார். தற்போது யோகி ஆதித்யநாத்திடம் உதவி கேட்டு மன்றாடி வரும் இதே ஷாசில் இஸ்லாம் அன்சாரி தான் கடந்த உ.பி தேர்தலின்போது, யோகி ஆதித்யநாத் இப்போது சத்தம் போட்டால், சமாஜ்வாதி கட்சியின் துப்பாக்கிகள் புகையை வெளியிடாது, அவை தோட்டாக்களை வெளியிடும் என மிரட்டியவர். முன்னதாக, கடந்த ஆட்சிக் காலத்தில் யோகி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, முறையான உரிமம் இல்லாத இவரது இவரது பெட்ரோல் பங்கை புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளியது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மீதான இவரது சமீபத்திய மிரட்டல் சம்பந்தமாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.