ஜன கண மன வந்தே மாதரம் சம அந்தஸ்து

பா.ஜ.க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தேச விடுதலை போராட்டத்தில், பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த, 1950ல், அரசியல் அமைப்பு சபை தலைவர் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், ‘ரவீந்திர நாத் தாகூர் இயற்றிய ‘ஜன கண மன…’ என்ற தேசிய கீதத்துக்கு நிகரான கௌரவத்தை, தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கும் வழங்க வேண்டும்’ என்றார். வந்தே மாதரம் பாடல் ஒட்டுமொத்த தேசத்தின் குணாதிசயத்தை குறிக்கிறது. ஜன கண மன கீதம், மாநிலங்களின் தனித் தன்மைகளை விவரிக்கிறது. எனவே, தேசிய கீதத்திற்கு நிகரான கௌவத்தை தேசிய பாடலுக்கும் வழங்க வேண்டும். அதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும். வந்தே மாதரம் பாடலை எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பாடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ’ அனுப்ப உத்தரவிட்டது.