ஹிந்து வெறுப்பு ஐ.பி.எஸ் அதிகாரி

வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டுமானத்தில் சிவலிங்கம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை ஒரு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாகவும் ஒரு ஹிந்துவெறி நடவடிக்கையாகவும் காட்டும் முயற்சியில், முஸ்லிம் அமைப்பினர், இடதுசாரிகள், தாராளவாதிகள், சில கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியான அனில் குமார் மீனா, ஞானவாபியில் சிவலிங்கத்தை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்ததை குறிப்பிட்டு இறைவன் சிவனை கேலி செய்துள்ளார். தனது  முகநூல் பதிவுகளில் அவர் தொடர்ச்சியாக சிவலிங்கம் குறித்து தரக்குறைவான, அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இப்படி அவர் செயல்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இதே அனில் குமார் மீனா, காசி விஸ்வநாத் வழித்தடத்தை பற்றியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.