புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ‘ஆம்பூர் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி உணவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையானதால், பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஹிந்து சமுதாயத்தில் மாட்டுக்கறி உணவு எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் பாரம்பரிய உணவாக இருந்ததில்லை. தமிழ் இலக்கியங்களில் புலால் மறுப்பு வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ் சமுதாயம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. மாடுகள், விவசாயிகளின் நண்பந்தானே தவிர அது உணவாக இருந்ததில்லை. இது அன்னியர்களிடம் இருந்து தொற்றிய வியாதி. சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது, குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் மீது மாட்டுக்கறி அடையாளத்தை திணிக்க நினைக்கின்றனர். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்ய முடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறுவதற்காக மாட்டுக்கறியை ஆதிதிராவிட மக்களின் உணவாக முத்திரை குத்த முயற்சி செய்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கை. மாட்டுக்கறி சாப்பிடும் ஒரு சிலரின் உணவு பழக்கத்தை பொதுவாக்கி, இழிவை சுமத்துவதை ஏற்க முடியாது. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று எச்சரித்தார்.