உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம் குறித்து கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தியில், ‘கோயிலுக்கான அடிபீடம் அமைக்கும் பணி, இந்த அண்டு பிப்ரவரியில் துவங்கியது. ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், ஆகஸ்ட்டுக்குள்ளாக இந்த பணி முடிக்கப்படும். அதன் பிறகு கோயிலுக்கான பணிகள் துவங்கும். இதற்கு தேவையான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிட்டபடி, 2023 டிசம்பருக்குள் கோயில் கட்டி முடிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.