மதம் மாற்றும் இன்ஸ்பெக்டர்

மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் உள்ள சில ஹிந்துப் பெண்கள், ‘கலியாசக் காவல் நிலையத்தின் காவல்துறை கண்காணிப்பாளர், எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் முஸ்லிம்மாக மதம் மாறும்படி கட்டாயப்படுத்துகிறார். எங்கள் கணவர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளார். எங்களையும் கைது செய்து கொடுமைப்படுத்துவதாக மிரட்டுகிறார். நங்கள் மதம் மாற விரும்பவில்லை. இதை நங்கள் எதிர்க்கிறோம்’ என கூறி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் விளக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மால்டா மாவட்ட தபால் நிலையம் முன்பு உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜியின் சிலைக்கு அருகில் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார், ‘மதம் மாற அழுத்தங்கள் இருந்தபோதிலும், மதம் மாறாத அவர்களின் உறுதியான தீர்மானம், துணிச்சலின் அடையாளம். மேற்கு வங்கத்தில் உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குடிமக்களின் மத உரிமையைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. இவர்களின் புகாரை தீவிரமாக விசாரித்து  அந்த காவல்துறை அதிகாரியை பணியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் பா.ஜ.க தெருவில் இறங்கி போராடும்’  என எச்சரித்துள்ளார்.