விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, 1998ம் ஆண்டு பொக்ரான் சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  டுவிட்டரில் பொக்ரான் சோதனைகளின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ள பிரதமர், “இன்று, தேசிய தொழில்நுட்ப தினத்தில், 1998ல் வெற்றிகரமான பொக்ரான் சோதனைகளுக்கு வழிவகுத்த நமது புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறந்த அரசியல் துணிச்சலையும், அரசியற் திறனையும் வெளிப்படுத்திய அடல் பிஹாரி வாஜ்பாயி’ஜியின் முன்மாதிரியான தலைமையை நாங்கள் பெருமையுடன் நினைவுகூருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.