9,000 பேர் சரண்

அசாம் மாநிலம் தமுல்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அசாமில் மட்டும் 9,000க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களை சேர்ந்தவர்கள் சரணடைந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளளனர். இதற்கு மிக முக்கியமான காரணம் போடோ ஒப்பந்தம். பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்புகளிலிருந்து அசாம் விடுவிக்கப்படும் என்றும், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் குறித்த விவாதத்தை முன்னெடுப்போம் என்றும் நாங்கள் கூறியிருந்தோம். குறுகிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து போடோலாந்து ஒப்பந்தத்தின் 90 சதவீத விதிமுறைகளை நிறைவேற்றிவிட்டதில் இன்று திருப்தி அடைகிறோம். போடோலாந்துடன் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். போடோலாந்து மக்கள் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், போடோ பிராந்தியத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன” என தெரிவித்தார்.