தி.கவின் ஊதுகுழலா சுகி சிவம்?

பட்டினப் பிரவேசம் குறித்து பேசியுள்ள அரைகுறை ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம், ‘கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து, இருந்து  தன்னை கடவுளாக நினைக்கின்ற குணம் பெரிதாகிவிட்டதா உங்களுக்கு? நடந்து போனால் நாட்டில் என்ன குடி முழுகிப் போய்விடும்? பெருமாளைத் தூக்குவது எங்கள் தலையெழுத்து; பெருமாளோடு சேர்ந்து இந்த மனிதர்களையும் சுமக்கவேண்டும் என்பது எங்களுக்கு என்ன தலையெழுத்து?’ என கேட்டுள்ளார். இது திராவிட கழகத்தின் விடுதலை பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆதீனத்தை சுமப்பது எங்கள் உரிமை அதனை எக்காலத்திலும் விட்டுத் தர மாட்டோம் என பாரம்பரியமாக இதனை செய்து வரும் மக்கள் பெருமையாக கூறுகின்றனர். ஆதீனத்தை சுமக்க நாங்கள் நேரில் வருவோம் என தமிழக பா.ஜ.க லைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட பல தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆதீனத்தை மக்கள் விருப்பப்பட்டு சுமப்பதை தடுக்க சட்டத்திலேயே இடம் இல்லை என்ற காரணத்தாலும் ஹிந்துக்களின் எழுச்சியாலும் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசே இந்த விவகாரத்தில் பயந்து பின்வாங்கிவிட்டது.

தி.கவின் முயற்சியால் ஊரறிய சிறியதாக நடைபெற்ற பட்டினப் பிரவேசம் தற்போது உலகறிய நடைபெறவுள்ளது. இதனால் நொந்துபோயுள்ள தி.க வேறு வழியின்றி, ஹிந்துக்களை குழப்ப சுகி சிவம் போன்ற கோடாரி காம்புகளை இதற்கு பயன்படுத்துகிறது. தன் கையைக்கொண்டே தன் கண்ணை குத்த வைக்கும் இதுபோன்ற டெக்னிக் எல்லாம் மிகப் பழையது, ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தி.கவினர் பயன்படுத்தி வருவதுதான். இதனை தற்போது மக்கள் புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், தாங்களே விருப்பப்பட்டு சுமக்கிறோம் என கூறும் ஆயிரக் கணக்கானவர்களை விட தன்னைத்தானே மிகப் பெரியவராக, புத்திசாலியாக, ஞானியாக நினைத்துக்கொண்டாரா சுகி சிவம்? அடக்கம்தானே மதத்தினுடைய அடிப்படையே என பேசும் இவரிடமே அடக்கம் என்பது எள்ளளவும் இல்லாதபோது மற்றவர்களைப்பற்றி பேச இவருக்கு என்ன தகுதி உள்ளது? ஒரு‌ கூட்டத்திற்கு வந்து பேச, லட்சங்களில் பணம், இன்னோவா கார், வந்து போக விமான டிக்கெட், நட்சத்திர விடுதியில் டீலக்ஸ் ஏசி‌ ரூம் என தனது வாயை வாடகைக்கு விட்டு  சம்பாதிக்கும் ஒரு ஆன்மிக வியாபாரிக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என சுகி சிவத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.