ஜாதிக் கயிறு கட்டுவது என்பது தமிழகத்தில் வழக்கத்தில் இல்லை. ஜாதிக் கயிறு என்ற பெயரில், கோயில்களுக்குச் சென்று கடவுளை வேண்டி கட்டப்படும் சாமிக் கயிறுகளையும் கோயில் விஷேசங்களை முன்னிட்டுக் கட்டப்படுகின்ற காப்புக் கயிறுகளையும் தடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஹிந்துகளின் நம்பிக்கையை சிதைக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என இந்து இளைஞர் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.