ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் பாரம்பரியம் கலாச்சாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக, தி.மு.க ஆதரவாளர்களான யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல், தில்லை நடராஜரை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டது. இதற்கு, மதுரை ஆதீனம், பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா, உள்ளிட்டவர்களும், ஹிந்து அமைப்பினர், பொது மக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடராஜரை கொச்சையாக பேசிய யூ2 புரூட்டஸ் என்ற யுடியூப் சேனல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும், அந்த சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரி, ஆதம்பாக்கம், உத்தமபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கூறியும் பெட்ரோல் டீசம் விலையை குறைக்காமல் மக்களை ஏமாற்றி வரும் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், ஊழல்கள், கவுன்சிலர்களின் அராஜகம் போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்பவே இதுபோன்றவர்களை தூண்டிவிட்டு நாடகம் ஆடுவதாக மக்கள் பரவலாக குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அதில் குழப்பங்களை ஏற்படுத்தி எதிர்கட்சிகளின் வாக்குவங்கியை பிரித்து ஆதாயம் அடைவதற்காக, இதேபோல கருப்பர் கூட்டத்தையும் தி.மு.கவே திட்டமிட்டு தூண்டிவிட்டதாக கூறப்பட்டது நினைவிருக்கலாம்.