மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு திடுக்கிடும் லவ் மற்றும் கற்பழிப்பு ஜிஹாத் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2021 ஜனவரியில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒரு ஹிந்துப் பெண், ராஜு ஜாதவ் என்பவரை காதலித்தார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி, கருவைக் கலைத்தார். செப்டம்பரில் இருவரும் ஹிந்து முறைப்படி சீதலா மாதா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அந்த சந்தோஷம் சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை. ராஜுவின் உண்மையான பெயர் இம்ரான் என்பதை அவர் அறிந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு மௌலானா, இருவரும் முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதற்காக அவர் முஸ்லிமாக மாற வேண்டும் என்று கூறினார். கணவரும் வற்புறுத்தி மதம் மாற்றினார். அதே இரவில், மௌலானா அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். மாமியாரால் உடல் ரீதியாக தாக்கி கொடுமைப்படுத்தப்பட்டார். 7 மாதங்கள் ஒரு அறையில் அடைக்கப்பட்டார்.
அவரது மைத்துனர்கள் அமன், புன்னி இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரது மாமியாரே அந்த பெண்ணை விபச்சாரத்தில் தள்ளினார். கடந்த ஏப்ரல் 20 அன்று அதிர்ஷ்டவசமாக அறையின் கதவு திறந்திருந்ததால் அந்த பெண் தப்பித்து பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கணவன் இம்ரான், மைத்துனர்கள், மாமியார் சுக்கா பேகம், மௌலானா ஒசாமா கான் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இம்ரானும் சுக்கா பேகமும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றவர்களை தேடிவருகின்றனர்.
இந்த விசாரணையில் இம்ரானின் வீடு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறுகிய பாதையில் புல்டோசர் செல்ல முடியாததால், நிர்வாகம் ஆட்களை வைத்து வீட்டை இடித்துத் தள்ளியது. இந்த பெண்ணுக்காக இதுவரை பட்டியலின ஜாதி அமைப்புகளோ காங்கிரஸ், பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளோ குரல் எழுப்பவில்லை. எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. அவருக்காக களமிறங்கியுள்ளது வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் போன்ற ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.கவும் மட்டுமே என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.