மலப்புரத்தில் ஒரு லவ் ஜிஹாத்

மலப்புரம் மாவட்டம், சம்ரவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்ற முஸ்லிம் நபருடன் எமிலி சமீபத்தில் காணாமல் போனார். சில நாட்களுக்குப் பிறகு எமிலி தனது சகோதரியுடன் தொலைபேசியில் பேசியபோது, அழுதுகொண்டே, ‘நான் ஷாஜகானுடன் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வரவில்லை. கட்டாயப்படுத்தப்பட்டேன். வர மறுத்தால் சகோதரிகள் இருவரையும் கொன்றுவிடுவேன் என்று ஷாஜஹான் மிரட்டினான்’ என தெரிவித்துள்ளார். எமிலியின் குடும்பத்தினர் காவல்துறையில் இது குறித்து அளித்த புகாரில், ஷாஜகான் முஸ்லீம் அல்லாத பெண்களை போதைப்பொருள் மூலம் சிக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளனர். புகாரை பதிவு செய்த காவல்துறை இருவரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்தது. காவல் நிலைய விசாரணையின்போதும், நீதிமன்றத்திலும் அந்த பெண், தாங்கள் காதலிப்பதாகவும் ஒன்றாக வாழ விரும்புவதாகவும் மாற்றி கூறினர். இந்த விசாரணைகளின்போது சில முஸ்லிம் இளைஞர்கள் ஷாஜகானுடன் வந்தனர். ஆனால் அவரது பெற்றோரோ உறவினர்களோ வரவில்லை. எமிலி தற்போது காயங்குளத்தில் உள்ள மத தீவிரமயமாக்கல் மையத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எமிலி வற்புறுத்தப்பட்டு கொலை மிரட்டல்களை எதிர்கொண்டதால் அவர் தனது அறிக்கையை மாற்றிக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முஸ்லிம் அல்லாத பெண்களை மணக்க,  நாடகக் காதல், போதைப்பொருள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல தந்திரங்கள் லவ் ஜிஹாத்தில் பயன்படுத்துகின்றன. இவ்வகை ஜிஹாத் இருப்பதை சமூகம் உணர்ந்து அதனை புரிந்துகொண்டு விழிப்புணர்வு அடையும்வரை, இந்த அச்சுறுத்தல்களும் கட்டாய மதமாற்றங்களும் தொடரத்தான் செய்யும்.

செய்தி ஆதாரம்: https://hindupost.in/featured/grooming-jihad-of-a-christian-girl-reported-from-tirur-in-malappuram-victim-shifted-to-radicalization-center/