இனிகோ சொன்ன புதுகதை

ஹிந்துக்கள், பாரத வரலாறு, தமிழக பெருமைகளையும் வரலாற்றையும் மாற்றி, திரித்து எழுதுவதில் இடதுசாரிகளுக்கும் திராவிட சிந்தனையாளர்களுக்கும் ஈடு இணை எவரும் இல்லை. ராமன் இவர்களுக்கு கற்பனை ஆனால், ராவணன் இவர்களுக்கு முப்பாட்டன். 10 ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நிலைத்து நின்று ஹிந்துக்களின் பெருமையை பறைசாற்றும் புராதன கோயில்கள் பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள். ஆனால், 2,000 வருடங்கள் மட்டுமே பழமையான கீழடியில் கவனம் செலுத்துவார்கள். ஹிந்துக்களையும் ஹிந்து மத பழக்கவழக்கங்கலையும் கிண்டல் அடிக்கத் தெரிந்த இவர்களுக்கு வேற்றுமதத்தை விமர்சிக்கும் தைரியம் இதுவரை வந்ததில்லை.

சமீபத்தில், கிறிஸ்தவ மதமாற்றக் கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி லாவண்யா தற்கலை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்தவ பள்ளி வார்டனை சிறை வாசலுக்கே சென்று பொன்னாடை போற்றி வரவேற்றவர் தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ். இவர் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது சில அபத்தமான கோரிக்கைகளை வைத்தார். சட்டவிரோத சர்ச்சுகளை துவங்குவது, அவற்றை நடத்துவதை ஆதரித்து பேசிய அவர், சட்டவிரோத சர்ச்சுகளை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஹிந்து ஒருவர் மதம் மாறிய பிறகு அவர் தன் மதத்தின் காரணமாக அனுபவித்து வந்த ஜாதியையும் அதனால் பெற்ற சலுகைகளையும் இழக்கிறார் என்கிறது சட்டம். ஆனால், பட்டியலின கிறிஸ்தவர்கள், வன்னிய கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க தீர்மானம் போட வேண்டும் என இந்த எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஊரெங்கும் 5 ஏக்கர் கல்லறைத் தோட்டம் அமைக்க வேண்டும் என கோரியுள்ள இவர், பாரதத்தில் தமிழ் மொழி அச்சில் ஏற காரணமாக இருந்தவர் பாதிரி சீகன் பால்க் என்றும் அவருக்கு தரங்கம்பாடியில் சிலை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த பாதிரியான சீகன் பால்க் மொழி பெயர்த்து வெளியிட்டது கிறிஸ்தவ மத நூலான பைபிளைத்தான். அவர் தனது மத பிரச்சாரத்திற்காகவே இதனை செய்தார். இதில் எங்கே தமிழ் தொண்டு உள்ளது என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.