தலையில் கட்டப்பட்ட ஓவியம்

கெளதம் தாபரின் அவந்தா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.1,900 கோடி கடன் வழங்குவதற்காக யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூருக்கு ரூ. 300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ராணா கபூர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவிடமிருந்து எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை ரூ. 2 கோடிக்கு வாங்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெட்ரோலியத்துறை மத்திய அமைச்சர் முரளி தியோரா, யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூரை வற்புறுத்தினார். அந்த பணம் சோனியா காந்தியின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. எம்.எஃப். ஹுசைன் ஓவியத்தை வாங்கியதற்கு ஈடாக கபூருக்கு பத்ம பூஷண் விருது மற்றும் கூடுதல் வணிகம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் உறுதியளித்தார் என ராணா கபூர் வாக்குமூலம் அளித்துள்ளார்.