தமிழகத்தில் மதமாற்றம்

தமிழகத்தில் ஹிந்துக்கள் பெரிய அளவில் மத மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, தென் தமிழகத்தில், கடலோர மாவட்டங்களில் இந்த மத மாற்றம் அதிகளவில் இருக்கிறது. கிறஸ்தவர்கள் ஒருபுறமும், முஸ்லிம்கள் மறுபுறமும் மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிந்துக்கள் அதிகம் வசித்த கிராமங்கள் இன்று முஸ்லிம்களின் கோட்டையாகவும், கிறஸ்தவர்களின் கோட்டையாகவும் மாறிவிட்டன. முஸ்லிம்கள் லவ்ஜிஹாத், இளைஞர்களை ஆசைகாட்டி மூளைசலவை செய்தல், என மத மாற்றம் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை பள்ளிகளிலேயே தொடங்கி விடுகிறார்கள். இதற்கு உதாரணங்களும் ஆதாரங்களும் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த மத மாற்ற விவகாரம் உண்மையா? என்பதை அறிய சி.என்.என். நியூஸ் 18 தொலைக்காட்சி நேரடியாகக் களமிறங்கியது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தியாளர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வில் ஈடுபட்டார். இதில், தென் மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை மக்களை குறிவைத்து மதமாற்றம் நடந்து வருவது பல்வேறு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.