செய்தித்தாள் போல நடந்துகொள்ளவும்

தி.மு.க’வின் அதிகாரபூர்வ செய்தித்தாள் முரசொலி. முன்பெல்லாம் தி.மு.க கட்சியினர் இதன் வழியாகத்தான் கட்சியின் நிகழ்வுகளை அறிந்து கொள்வர். அப்படிப்பட்ட முரசொலி நாளிதழ், நேற்று, “1959’ம் ஆண்டு நம்பூதிரிபாட் ஆட்சியை கலைத்தவர்கள் யார் தெரியுமா? இந்திரா காந்தி அம்மையார் கலைத்தார்கள், நாம் கலைத்தோமா?” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டிருந்ததை குறிப்பிட்டு, “1959’இல் பிரதமராக இருந்தவர் யார் என தெரியாதவர்கள் எல்லாம் தங்களை ஐ.பி.எஸ் என கூறிக்கொண்டு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கின்றனர்” என  செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழில் தினசரி நாளிதழ் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ‘டாய்லெட் பேப்பருக்குத் தகுதியான செய்தித்தாள் தமிழகத்தில் முரசொலி என்று அழைக்கப்படுகிறது. இது தி.மு.க’வின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள். கேரளாவில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதற்கான எனது வீடியோவையும் நான் பேசியதற்கான ஆதாரத்தையும் தயவுசெய்து பார்க்கவும்” என கூறி தான் பேசிய வீடியோ’வையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.