பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மரியா தாஹிர் என்ற பெண் 2015ல் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறை நீதிமன்றம் என அலைந்து அவருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள ஒரு வீடியோ பதிவில், “கடந்த ஏழு ஆண்டுகளாக நீதிக்காகப் போராடுகிறேன். காவல்துறை, அரசு, நீதித்துறை ஆகியவை எனக்கு நீதி வழங்கத் தவறிவிட்டன. உள்ளூர் காவல்துறையும் மூத்த அரசியல்வாதியான சௌத்ரி தாரிக் ஃபாரூக் உள்ளிட்டோரால் எனக்கும் எனது பிள்ளைகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்களுக்கு தங்குமிடமும் பாதுகாப்பும் வழங்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்னைபோலவே கற்பழிப்பிலிருந்து தப்பியவர்கள் பலர் உள்ளனர். அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உயிர் பயம், சமூக புறக்கணிப்புகளுக்கு அஞ்சி அதை வெளியே சொல்வதில்லை” என கூறியுள்ளார்.