ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யு) ஸ்ரீராம நவமி விழாவை முன்னிட்டு ஏ.பி.வி.பி மாணவர்கள் நடத்திய யாகத்தின்போது எஸ்.எப்.ஐ, ஏ.ஐ.எஸ்.எப் போன்ற இடதுசாரி மாணவர் குழுக்கள் ஏ.பி.வி.பி மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். இந்த தாக்குதலில் மாணவிகள், உடல் ஊனமுற்ற மாணவர் உட்பட பல ஏ.பி.வி.பி மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜே.என்.யு நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பல்கலைக் கழக வளாகத்தில் எந்த வன்முறையையும் பொறுத்துக்கொள்ள முடியாது. மாணவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என கூறியது. இந்நிலையில், ஸ்ரீராம நவமியின்போது அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஜே.என்.யுவிடம் மத்திய கல்வி அமைச்சகம் கோரியுள்ளது. சுவாரஸ்யமாக, ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜானின் போது, ஜே.என்.யூவில் இப்தார் விருந்து நடத்தப்படுகிறது. இதுவரை ரம்ஜானின் போது ஒரு வன்முறை சம்பவம் கூட பதிவாகவில்லை. ஆனால் ஸ்ரீராம நவமி விழாவின் போது மட்டும் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டு உள்ளது என்பது சற்றே சிந்திக்கத்தக்கது.