மத்தியப் பிரதேசம் கர்கோனில் ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது கற்களை வீசிய முஸ்லிம் வன்முறையாளர்கள் மீது அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 50 சட்டவிரோத கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. வன்முறையாளர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கு அவர்களிடம் இழப்பீடு வசூலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என கூறியுள்ளார். அதாவது, கல் வீசும் வன்முறையாளர்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பதும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்பான சர்வதேச விதிகளை மீறுவதாக அவர் கருதுகிறார். அவரின் இக்கருத்து தேசமெங்கும் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.